ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ள சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கியா சமுர்த்தி விசேட வீடு கையளிக்கும் நிகழ்வு சார்ந்த மருது - 01ம் பிரிவில் இடம்பெற்றது.
சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டினை திறந்து வைத்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினதும் , பிரதேச தனவந்தர்களினதும் பத்து லட்சம் ரூபா நிதியினைக் கொண்டு இவ்வீடு நிர்மாணித்து கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு , உதவி திட்டமிடல் பணிப்பளர் கே.எல்.ஏ.ஹமீட் , சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.றிபாயா , ஏ.எம்.ஏ.கபூர் , சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம். காலிதீன், எம் எம்.றஸானா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சமுர்த்தி வீட்டு லொத்தர் மூலம் சாய்ந்தமருது - O8ம் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றும் கையளித்து வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment