விவசாயத்தில் இயற்கை உரத்தைப் பயன்படுத்துவது பற்றிய கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய, கண்டி மாநகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளைப் பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் திட்டத்தை கண்டி மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாதந்தோறும் நூற்றுக்கணக்கான மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவை கட்டுகஸ்தோட்டை, கொஹாகொட என்ற இடத்திலுள்ள தேக்கவத்த குப்பை சேகரிப்பு ஸ்தானத்தில் குவிக்கப்படுகின்றன.
இங்கு மாதமொன்றுக்கு 40 மெற்றிக் தொன் பசளையை உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.
சேதனப் பசளை தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய, உற்பத்தி ஆற்றலை பெருக்குவது பற்றி ஆராய்வதற்காக மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ.கமகே தலைமையிலான குழு நேற்று முன்தினம் (3) கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இதன்போது, உற்பத்தி மேம்பாட்டுக்குத் தேவையான மூலதனத்தையும், உபகரணங்களையும் பெற்றுத் தரப் போவதாக ஆளுனர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment