இலங்கை தேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகத்துடன் இணைந்தே பயணிக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுகின்ற பொழுதுதான் ஐக்கியமாக ஒரு நாட்டு பிரஜைகளாக வாழமுடியும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முகம்மட் சாட் கத்தாக் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரஃப் அவர்களின் அழைப்பின் பேரில் பொத்துவில் அறுகம்பே புளு வேவ் ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை (01) இரவு நடைபெற்ற புத்திஜீவிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே உயர்ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகம் புனித அல் குர் ஆனையும் முகம்மது நபி(ஸல்) அவர்களது வாழ்க்கை முறையனையும் தனது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக எடுத்துக் கொள்வீர்களேயானால் எந்த பிரச்சினையும் எழுதி என்றும் அவ்வாறு பிரச்சினைகள் எழுந்தாலும் அவற்றுக்குக்கான தீர்வும் புனித அல் குர் ஆனில் காணப்படுகின்றது. இன்று நமது பெற்றோர்கள் நம்முடன் உயிர் வாழலாம் அல்லது உயிர் வாழாமல் விடலாம். நாமும் எப்போதாவது மரணித்தேயாக வேண்டும். எனவே நாம் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைக்கு தயாராகவே இவ்வுலகத்தில் வாழ்கின்றோம். இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது.
உங்களது பிள்ளைகளினை பெற்றோருக்கு பணிவிடை செய்யக்கூடிய பிள்ளைகளாக வளர்தெடுக்க வேண்டிய பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்துகின்ற திட்டங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்குமானதே தவிர தனியாக முஸ்லிம் மக்களுக்கு மட்டுமானதல்ல. எமது நட்புறவு பாகிஸ்தான் அரசிற்கும் இலங்கை அரசிற்குமானது. இலங்கை குறிப்பிட்ட ஒரு சமூகத்தினையோ அல்லது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தினையோ அடையாளப்படுத்தி எமது திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. நாங்கள் இலங்கை அரசாங்கத்திடமே எமது உதவிகளை வழங்குவோம். அதனை இலங்கை அரசாங்கமே பகிர்ந்தளிக்கும்.
பாகிஸ்தான் வருடா வருடம் வழங்குகின்ற புலமைப் பரிசில்களும் கூட முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டுமானதல்ல. நீங்கள் எமது வலைத்தளத்தினை பிரவேசிப்பதன் மூலம், பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களினை பார்வையிடுவதன் மூலம் அதற்கு விண்ணப்பிக்கலாம். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உங்கள் வீடுகளுக்கு வந்து புலமைப் பரிசில் தொடர்பாக விண்ணப்பியுங்கள் என கூற முடியாது.
உமது பெற்றோரினது சொத்துக்களினை பங்கிடுவதினிலயே உமது உறவினர்களுக்கிடையில் உங்களால் நீதியாக நியாயமாக நடந்து கொள்ள முடியாதுள்ள போது எவ்வாறு ஒரு நாட்டின் அரசாங்கத்திடமிருந்து நூறு வீதம் நியாயத்தினை எதிர்பார்க்க முடியும். எமது நாடு பாகிஸ்தான் இலங்கை நாட்டுடன் எப்பொழுதும் ஒரு சிறந்த உறவினை பேணி அதனை மேலும் வலுப்படுத்தவே விரும்புகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மட் சாத் கத்தாக் அவர்கள் பிரதம அதீதியாகவும், அம்பாறை மாவட்டைச் சேர்ந்த புத்திஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் பல்லின சமூகங்கள் வாழும் சூழலில் முஸ்லிம் அரசியல் குறித்தும், இலங்கை முஸ்லிம்கள் மீதான சமகால அரசியல் மற்றும் உரிமைசார் நெருக்கடிகள் குறித்தும் பலரும் உரையாற்றியமையும் விசேட அம்சமாகும்
0 comments :
Post a Comment