ஈழத்தின் நவீன தமிழ் இலக்கிய வரலாறு முழு தொகுப்பாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். பாரதியுடன் இன்றைய சூழலில் நவீன தமிழ் இலக்கிய வரலாறு ஒரு நூற்றாண்டை அண்மித்த விட்ட நிலையிலும், ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் உலகத் தமிழ் இலக்கியமாக பரிணாமித்த நிலையிலும் ஈழத்து நவீனத் தமிழ் சிறுகதை வரலாறு முழுமையாக எழுதப்படாத நிலையில்,அந்த ஆய்வுக்கு உதவும் ஓர் ஆவணமாக அமையும் வகையில் . ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் முகநூலில் எழுதி வரும் தொடரான பிடித்த சிறுகதை எனும் தொடர் அமைந்துள்ளது.இத்தொடர் இற்றைவரை சுமார் 600 ஈழத்து தமிழ் சிறுகதையாளர்கள் பற்றிய அறிமுக குறிப்புகள் அடங்கிய ஒரு தொடராகும்.
இத்தொடரின் முதல் 200 குறிப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலாக 2019 ஆம் ஆண்டு பிடித்த சிறுகதை-முதலாம் தொகுதி-1 எனும் தலைப்பில் , ஓரு தொகுப்பு நூலாக 2019 ஆம் டிசம்பர் மாதம் யாழில் நடந்தபுத்தக திரு விழாவில் கொடகே நிறுவனத்திதினரால் வெளியிடப்பட்டது.
கொடகே நிறுவனத்தை பொறுத்த வரை இலங்கையின் மிக முக்கிய புத்தக நிறுவனமாகும்.வருடந்தோறும் சுமார் 600 தலைப்பில் சிங்களம்ஆங்கில நூல்களை வெளியிட்டு வருகின்றதோடு, சுமார் பத்து வருடளுக்கு மேலாக தமிழ் நூல்களையும் வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் 23 வருடங்களா சிறந்த வெளியிட்டாளருக்கான விருதினை பெற்றுவரும் ஒரு நிறுவனமாகும்.. அத்தோடு அந்த நிறுவனம் காலம் காலமாக மும்மொழிகளிலும் நடத்தும் போட்டிகளிலும் , சிறந்த நூல் தெரிவுகளிலும் பரிசு-விருது பெற்ற சிங்கள- ஆங்கில நூல்களுக்கு இணையாக தமிழ் நூல்களுக்கும் வழங்கி வருகிறது என்பது குறிப்படதக்கது.
நந்தினி சேவியரின் பிடித்த சிறுகதை தொடரை பொறுத்த வரை அதன் முதல் தொகுப்பில் ஈழத்தின் முக்கிய எழுத்தாளரான எஸ்.பொ முதல் ஓடுக்கப்பட்ட சமூகத்தின் குரலை தன் சிறுகதைகளில் பதிவு செய்து வரும் க. கோபாலபிள்ளை வரையிலான படைப்பாளிகளை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறன. அந்த 200 எழுத்தாளர்களில் பல்வகையினராக காணப்படுகின்றனர். அதே மாதிரியாக அத்தொடரை 200 ஆக பிரித்து இன்னும் இரண்டு தொகுப்புகளாக வெளிவரவேண்டிய தேவை இருக்கிறது.இரண்டாவது தொகுப்பில் சி.வனின்யகுலம் முதல் எச்.எம்.பி முஹீதீன் வரையிலான படைப்பாளிகளை பற்றிய குறிப்புகளும், மூன்றாவது தொகுப்பில் மெலிஞ்சிமுத்தன் முதல் இற்றை முகநூலில் தொடரில் எழுதப்பட்ட அஸ்மியா அஷ்ரப். வரையிலான படைப்பாளிகளை பற்றிய குறிப்புகள் அடங்கி இருக்கின்றன. இந்த நிலையில் இரண்டாவது , மூன்றாவது தொகுப்புகள் வெளிவரவேண்டிய தேவை இருக்கிறது. ஈழத்தைபொறுத்த வரை இவ்வாறான பிரமாண்டமான தொகுப்புகளை வெளிக்கொணரும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருக்கின்ற சூழ்நிலையில் , தமிழகத்தில் இத்தகைய தொகுப்புகளை வெளி யீடுவதில் பல நடைமுறை சிக்கல்கள் நிறைந்த சூழலில், ஈழத்தின் அரச நிறுவனங்களான தேசிய கலாசார திணைக்களம், மற்றும் வட மற்றும் கிழக்கு பண்பாட்டு அலுவலகங்கள் அமைச்சுகள் இத்தகைய பிரமாண்டமான நூல்கள் வெளியிடுவதற்கான பொருளாதார வசதி வாய்ப்புகளை அரசு சார்ந்த இந்த நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் நந்தினி சேவியரின் பிடித்த சிறுகதை தொடருக்கான தொகுப்புகளை வெளியீடும் முயற்சிகளை பற்றி பரீசீலனை செய்யலாம். அதன் மூலம் ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பணி செய்த தாக அமையும்.
0 comments :
Post a Comment