J.f.காமிலா பேகம்-
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீனின் கோரிக்கையை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று வியாழக்கிழமை முற்றாக நிராகரித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியூதீனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, மூர்து பெர்ணான்டோ, காமினி அமரசேகர உள்ளிட்டவர்கள் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தங்கள் இருவரையும் அவர்களது சொந்த இல்லங்களில் வீட்டுக்காவலாக வைத்து விசாரணை செய்வதற்கான கோரிக்கை அங்கிய மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
எனினும் அவர்களது இந்தக் கோரிக்கையை ஏற்கமுடியாதென சட்டமா அ அதிபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனு மீதான அடுத்த விசாரணையை இம்மாதம் 28ஆம் திகதி வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
0 comments :
Post a Comment