அஸ்பர் உதுமாலெப்பைவின் முயற்சியின் பலனாக சம்மாந்துரை- மஜீத் புரம் வீதி புனரமைப்பு


எம். என். எம். அப்ராஸ்-

நாட்டின் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை தொகுதி முக்கியஸ்தகரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் உதுமாலெப்பை அவர்களின் முயற்சியின் பலனாக மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள மஜீத்புரம்
பிரதேசத்திற்க்கு செல்லும் பிரதான வீதியானது
புனரமைக்கப்படவுள்ளது.

வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஒரு லட்சம்
கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் சுமார் 5.5 அளவிலான கிலோமீட்டர் வீதி கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு வீதியின் ஆரம்ப வேலை திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன இந் நிலையில் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் அவர்கள் நேரடியாக மஜீத்புரத்திற்க்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார்

அத்துடன் மிக நீண்ட காலமாக
குன்றும் குழியுமாக, காணப்பட்ட இவ் வீதியின் அபிவிருத்தி தொடர்பில் மிகவும் கரிசனை செலுத்திய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் உதுமாலெப்பை அவர்களுக்கு மஜீத்புர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் வீதியினால் போக்குவரத்து மேற்கொள்வோர் நன்றியினை தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :