சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி பயனாளியிடம் வீடு கையளிப்பு!



சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)-
ம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் சமூர்த்தி லொத்தர் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் "திரியபியச"சமூர்த்தி விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு நேற்று (03) மாலை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

சமூர்த்தி லொத்தர் நிதியுதவியின் கீழ் ஒரு வீட்டிற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா செலவில், பயனாளிகளின் பங்களிப்புடன் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள மட்டக்களப்பு தரவை-02 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட பயனாளிகளுக்கே இவ்வீடு வழங்கிவைக்கப்பட்டது.
நிரந்தர வீடில்லாத, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடுகள் குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம்,கிராம சேவகர்,சமுர்த்தி உத்தியோகத்தகர் என குறிப்பிட்ட அளவானோர் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :