IOM,ILO நிறுவனத்தினர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இணைந்து COVID -19 தாக்கம் காரணமாக நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களை சமூக பொருளாதார ரீதியாக மீள்ஒருங்கிணைப்புச் செய்வதற்கான அறிமுகக் கூட்டம் இன்று காலை 11.30 க்கு மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களும் MS Teams செயலி ஊடாக இணைந்து கொண்டு COVID -19 தாக்கம் காரணமாக நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக பொருளாதார நலன்களை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப்பணிப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,மற்றும் மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment