முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் அவர்களின் முயற்சியினால் நிந்தவூர் மண்ணுக்கு கொண்டுவரப்பட்டிருந்த நித்தவூர் சிறுவர் மற்றும் பெண்கள் மகப்பேற்று வைத்தியசாலையின் கட்டுமாணப்பணிகள் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பொதுப்பணிப்பாளர் டாக்டர். அசேல குணவர்தன, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம்.தெளபீக் மற்றும் சுகாதார அமைச்சின் உயர்மட்ட வைத்திய அதிகாரிகள் ஆகியோர் நேற்று முன்தினம் (2021.07.18) குறித்த இடத்திற்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தினர்.
இதன் இரண்டாம்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்காக சுமார் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், நிறைவுப்பணிகளை துரிதப்படுத்துவதாக சுகாதார சேவைகள் பொதுப்பணிப்பாளர் டாக்டர். அசேல குணவர்தன பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களிடம் உறுதியளித்திருந்தார்.
0 comments :
Post a Comment