நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் விடுதி பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.



யாக்கூப் பஹாத்-
நேற்று (2021.06.30) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விடுதி கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இதனால் எமது பிரதேசத்தில் கோரோனா தெற்றுக்குள்ளாகும் நோயாளர்களுக்கு நிந்தவூர் கோரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் வசதிகளை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஏற்படுத்தி தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இன் நிகழ்வு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி ஷகிலா இஸ்ஸதீன் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் G.சுகுணன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பறூசா நக்பர் மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் SMBM. பாருக் இப்றாஹீம் அவர்களும் மேலும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :