கொழும்பு மாவட்டம் (வட கொழும்பு) மாதம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நாடறிந்த பிரபல இளம் தஃவாப் பேச்சாளரும் , மார்க்க விடயங்களில் ஏற்படும் பல சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஒருவருமான அஷ் ஷேஃக் மெளலவி அக்தார் (மிஸ்பாஹி) ஹழ்ரத் அவர்கள் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மாதம்பிட்டிய பிரதேச (கொழும்பு வடக்கு) இணைப்பாளராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹழ்ரத் அவர்கள் கொழும்பு , மாதம்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவரும் ஹாலித் இப்னு வலீத் பகுதி மத்ரஸாவின் அதிபரும் , அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வட கொழும்பு கிளையின் உறுப்பினரும் , பல வாலிப சங்கங்களிள் உறுப்பினராகவும் இருப்பதோடு, வாலிபர்களின் விடயங்களில் மிகவும், பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் ஹழ்ரத் அவர்கள் தமது தஃவா உரைகளின் மூலம் சமூகத்திற்கு பிரயோசனமான பல விடங்களை (வாழிகாட்டல்களை) எடுத்து கூறிக்கொண்டிருகின்றமையும் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
இவர் கடந்த மாதம் ஐக்கிய காங்கிரசில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment