கல்முனை பிராந்தியத்திற்கான ஆயுர்வேத பாதுகாப்பு சபைக்கான உத்தியோகபூர்வ கட்டிடம் இன்று(19) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியினால் ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாண பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.சி.டில்சாத்திடம் கையளிக்கப்பட்டது.
சுமார் 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இக் கட்டிடம் கல்முனை இஸ்ஸலாமபாத் கிராமத்தில் அமையப்பெற்று உள்ளது.
மேற்படி நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கணக்காளர். யூ.எல்.ஜவாஹிர்,ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் கல்முனை பிரதேச உதவி தலைவர் வைத்தியர் கே.வை.சுந்தர்நாதன்,பொருளாளர் வைத்தியர், பி.எம் அப்துல் காதர்,பாதுகாப்பு சபை உறுப்பினர் எம்.எம் மின்கார்,பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம் ஹசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment