ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா



பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களுக்கு இன்று (06) எழுத்துமூலம் அறிவித்தார்.

அதற்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜயந்த கெட்டகொட அவர்கள் 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர் அந்தப் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

அதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் இராஜினாமா செய்யும் வரை ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசானாக பதவி வகித்ததுடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பொது மனுக்கள் பற்றிய குழு மற்றும் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு என்பவற்றில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

பணிப்பாளர் (தொடர்பாடல்)
இலங்கை பாராளுமன்றம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :