நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணிக்கு பூஸ்டர் வழங்கி வைப்பு.



யாக்கூப் பஹாத்-
நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணியின் கொவிட்-19 விழிப்புணர்வு நடவடிக்கையின் ஓர் அங்கமான ஆயுர்வேத நோய் எதிர்ப்பு பூஸ்டர் இனை பொதுமக்களிற்கு வழங்கி வைக்கும் மனிதாபிமான பணிக்காக நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நபீல் அலியாரினால் 500 பூஸ்டர் பக்கட்டுக்கள், அதன் பிரதான செயற்பாட்டாளரான ஆசிரியர் ஐ.எல்.ஏ சலாமிடம் வழங்கிவைக்கப்பட்டது.

அண்மைக்காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் களமிறங்கி கடமை புரியும் இந்த இளைஞர் தன்னார்வ அணியினர், கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் அவர்களிற்கு விடுத்த வேண்டுகோளிற்கிணங்கவே முதற்கட்டமாக 500 பூஸ்டர் பக்கட்டுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிந்தவூர் பிரதேசத்திலும் அதிகரித்துவரும் கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தன்னார்வமாக கடமை புரியும் இந்த இளைஞர் அணியினர் பூஸ்டர் பக்கெட்டுகளை ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும், ஊரில் பிரதானமாக ஜன நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் வழங்கி வைக்கவுள்ளனர்.
அத்துடன் இவர்களது சமூகப்பணியில் பிரதானமாக முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவிக் கொள்ளுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் நடந்து கொள்ளும் முறை மற்றும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்.
இதேவேளை தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு உதவி ஒத்தாசைகள் வழங்கும் பாதுகாப்பு தரப்பினர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நிந்தவூர் பிரதேச செயலாளர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்டோர்களுக்கு தன்னார்வ அணியின் உறுப்பினர்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :