கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச சபையினால் மல்லிகைத்தீவு கிராம குடியிருப்பாளர்கான நீர்த்தாங்கிகள் வழங்கும் நிகழ்வு வள்ளுவர் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கெளரவ அதிதியாகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான என்.கோவிந்தசாமி, ஏ.சீ.எம்.சஹீல், கே.எல்.இன்பவதி, கே.குலமணி, கே.எல்.சிஹாமா, சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, கிராம உத்தியோகத்தர் கே.பிரகாஸ், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
96 குடும்பங்கள் வசிக்கும் மல்லிகைத்தீவு கிராமத்தில் சுத்தமான குடிநீர்யின்மையினால் சம்மாந்துறை, மல்வத்தை போன்ற பிரதேசத்திருந்து குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரைக்கும் பிரதேச சபையினால் வவுசர் மூலம் வினியோகிப்படும் குடிநீரை சேகரித்து வைத்து அருந்துவதற்காக உள்ளுராட்சி அமைச்சின் மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை வேலைத்திட்டத்தின் (PSDG) கீழ் தெரிவுசெய்யப்பட்ட 83 குடும்பங்களுக்கு 500 லீற்றர் நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment