கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்மராட்சி வலய மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நேற்றையதினம் 18.07.2021 காலை கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
சாவகச்சேரி இந்துவில் கல்வி கற்ற 75 - 76 NCGE வைபர் குழும நண்பர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு அந்த அணியைச் சேர்ந்த ஆசிரியர் அ. ரங்கன் தலைமையில் நடைபெற்றது. 32 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் பிரகாரம் வைப்பிடப்பட்டு வங்கிப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சி. சுதோகுமாரும் சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த. கிருபாகரனும் கௌரவ விருந்தினர்களாக சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
75 - 76 அணி சார்பில் நாவற்குழி மகா வித்தியாலய அதிபர் சி. பவளகுமாரன் நன்றியுரை ஆற்றினார். சாவகச்சேரி இந்துவின் இளைப்பாறுகை பெற்ற பிரதிஅதிபர் பாலசண்முகநாதன் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.
75 - 76 அணியைச் சேர்ந்த யாழ். இந்து ஆசிரியர் ந.ரவிகுமார் (சரசாலை), பொன்னையா குகன் (கல்வயல்) உள்ளிட்டோரும் தென்மராட்சி உயர்தரப் பாடசாலைகளின் அதிபர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment