சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் விடுத்த ஊடக அறிக்கை



எம்.எம்.ஜபீர்-
ரு பிரதேச சபையின் தவிசாளர் வேறு, பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திற்கு தன் இன மக்களின் அழைப்பின் பேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதில் எந்த பிணக்குமில்லை. அந்த பிரச்சினை தொடர்பாக இன்னொரு இன குழுவைப்பற்றி ஊடகங்களுக்கு அறிக்கைவிடுவது என்பது அரசியல் நாகரீகத்திற்கு முரணான செயற்பாடாகும் என சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தெரிவித்தார்.

சம்மாந்துறை உதயபுரம் மைதான /மயான வீதி அபிவிருத்தி விடயம் தொடர்பாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தை சுட்டிகாட்டி இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை உதயபுரம் மைதான /மையான வீதி அபிவிருத்தி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எந்த இன வேற்றுமையின்றி மக்களின் தேவைகளையும், உணர்வுகளையும் உள்வாங்கி சகல நடவடிக்கையும் முன்னெடுக்கும் இந்சந்தர்ப்பத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இன்னொரு இனத்தைப் பார்த்து இனவாத குழுக்கள் போன்ற சொற்பிரயோகங்கள் என்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையினை எடுத்துக்காட்டுகின்றது.

அப்பகுதியில் வாழ் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் ஆக்கபூர்வமாக தீர்த்துவைப்பது அந்தந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் பிரதிநிகளின் கடமையாகும் இதனைப் பொறுப்பு வாய்ந்த பல்லினம் வாழும் பிரதேச சபையின் தவிசாளர் மக்கள் மத்தியில் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது கவலையழிக்கின்றதும், தவிர்க்கப்பட வேண்டியதுமாகும்.
உதயபுரம் மைதான/மயான வீதி எந்த இன வேற்றுமையின்றி மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உள்வாங்கி தீர்க்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :