பல்வேறு விடயங்களுக்கு தீர்வைக் கோரி மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் இன்று (20) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நியாயமான 1000 ரூபா சம்பள உயர்வு வேண்டும், வேலை நாட்களை குறைக்கப்பட கூடாது, கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு ஆர்ப்பாட்டகாரர்கள் கோரியுள்ளனர்.
பிரவுன்ஸ்விக் தோட்ட ஆலய முன்றலில் இன்று காலை 8.30 அளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்கப்பட்டுள்ளது.
1000 ரூபா சம்பள அதிகரிப்பை தருவதாக கூறிய கம்பனிகள் தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாக அவர்கள் கூறினார்.
முன்னர் நாளொன்றுக்கு 16 கிலோ பச்சை தேயிலையை பறித்து வந்த நிலையல் இன்று அது 20 கிலோவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான நிர்வாகங்களின் கெடுபிகளால் தாம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நிர்வாகத்தால் தோட்டம் உரிய முறையில் பராமறிக்கப்படாமையால் தேயிலை செடிகள் காடுகளாய் மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தேயிலை செடிகளுக்கும் பெரும் அச்சதுடனேயே பணி செய்ய வேண்டியுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றை நிர்வாகம் முறையாக செலுத்துவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தலையிட்டு நியாயமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பேதமின்றி 150 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment