வறுமையை ஒழிக்கும் நோக்காக கொண்ட "சௌபாக்கியா வார வேலைத்திட்டம்" மன்னார் மடு மாதா கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைப்பு.



லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உதயமாகிய "சுபீட்சத்தின் நோக்கு" எனும் உயரிய கொள்கைப் பிரகடனத்தின் கீழ் சௌபாக்கியா வாரம் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக சமூர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் உயரிய நோக்கில் இன்று(10) மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாதா கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது சுயதொழிலில் ஈடுபடும் பயனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் நோக்கில் சுமார் 8.9 மில்லியன் ரூபாய் செலவில் நெசவுக் கைத்தொழிலை விருத்தி செய்வதற்காக குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரென்லி டீமெல், மடுப் பிரதேச செயலாளர் திரு.நிஜாகரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. மஹேஸ்வரன் ,மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஜனாப். அலியார் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பயனாளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :