உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம்



ள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளதை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி பெரிதும் வ‌ர‌வேற்றிருப்ப‌துட‌ன் இதற்காக‌ கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி ம‌ற்றும் பிர‌த‌ம‌ரை பாராட்டுவ‌தாக‌வும் இது விட‌ய‌ம் விரைவாக‌ அமுலுக்கு வ‌ர‌ வேண்டும் என‌வும் வேண்டுகோள் விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ள‌தாவ‌து ,

உள்ளூராட்சி மன்றங்களில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, 8000 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஜ‌ன‌க‌ ப‌ண்டார‌ தென்ன‌கோன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலனை முன்நிலைப்படுத்தி செயல்படும் அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவொரு சவால் ஏற்பட்டாலும், மக்களுக்காக தீர்மானம் எடுக்க அரசாங்கம் பின்நிற்காது என்ற‌ வ‌கையில் இந்த‌ அர‌சின் இத்த‌கைய‌ ந‌ட‌வ‌டிக்கைக்காக‌ அர‌சை எம‌து க‌ட்சி பெரிதும் பாராட்டுகிற‌து.

க‌ட‌ந்த‌ 7 அல்ல‌து 8 வ‌ருட‌ங்க‌ளாக‌ உள்ளூராட்சி ம‌ன்ற‌ங்க‌ளில் ப‌ணிபுரிவோருக்கு நிர‌ந்த‌ர‌ நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்காம‌ல் க‌ட‌ந்த‌ அர‌சு அவ‌ர்க‌ளை கைவிட்டிருந்த‌து.

அந்த‌ வ‌கையில் இந்த அர‌சின் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அவ‌ர்க‌ள் இவ‌ர்க‌ளுக்கு உட‌ன‌டி நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ உத்த‌ர‌விட்டிருப்ப‌த‌ன் மூல‌ம் ம‌க்க‌ள் ந‌ல‌னில் மிக‌ அக்க‌றை கொண்டிருக்கும் பிர‌த‌ம‌ரை அர‌சின் ப‌ங்காளிக்க‌ட்சி என்ற‌ வ‌கையில் எம‌து ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி பெரிதும் பாராட்டுகிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :