தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை, தொடர்ந்தும் தாமதமாகி வருவதால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, கட்சியின் உயர்பீடத்தை அவசரமாகக் கூட்டுமாறு மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான ஏ.ஜே.எம்.பாயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சியின் பிரதித்தலைவர் சட்டத்தரணி சஹீதிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள பாயிஸ், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பால், தலைவரை விடுதலை செய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
ஒவ்வொரு வழக்கு விசாரணைகளின் போதும், நீதியரசர்கள் விலகிச் செல்வதால் தலைவரின் அபிமானிகளும், ஆதரவாளர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், மிகவும் மனமுடைந்து போவதாகவும், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளிலிருந்தும், மக்களை நேரடியாக சந்திக்கும் பொழுதிலும் புலப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment