டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக புகை விசிறல் செயற்பாடுகள் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு பிரதேசத்திலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க மூடப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களில் சுற்றுப்புறச் சூழல் நிலமைகள் பற்றி ஆராயும் கள விஜயத்தினை கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த கால கட்டத்தில் அதிகமான டெங்கு நோய் பரவக் கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதனால் பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புற சூழல்களை நாளுக்கு நாள் சுத்தமாக்கி கொள்ளுமாறும் தினமும் காலையில் குறைந்தது 10 நிமிடங்கள் சுற்றுச்சூழலை பரிசோதித்து நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி டெங்கு நோயிலிருந்து இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment