நூருல் ஹுதா உமர்-
தொடரும் கொரோனா தொற்று அபாயம் சம்மந்தமாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் இதுவரை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 202 பேர் மொத்தத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன் அதில் 06 பேர் மரணமரணமடைந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் கடந்த 10 நாட்களில் 11 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தாக உள்ளது. கொறோனா தொற்று அபாயம் முற்றுப்பெறாதநிலையில் அன்றாட வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு கொறோனாவுடனான இயல்புவாழ்கைக்கு படிப்படியாக நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் ஒன்று கூடல்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை கருத்திற்கொண்டு மக்கள் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பாக திருமண நிகழ்வுகள் மரண வீடுகள் சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக ஒன்று கூடும் பட்சத்தில் கொறோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து நிலமையை கருத்திற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் இளவயதினர் தங்களுடைய ஒன்று கூடல்களை இன்னும் சற்றுக்காலதிற்கு தவிர்த்துகொள்வதுடன் அத்தியவசியமான ஒன்றுகூடல்களை சுகாதார விதிமுறைப்படி மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன். என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment