தென்னங்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம் கல்முனையில் அங்குரார்பணம்



எம்.என். எம்.அப்ராஸ்-
பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கை மேம்பாடு மற்றும் அவைசார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுஇணைந்து மேற்கொள்ளும் வீட்டுக்கு வீடு 'கப்ருக'40 இலட்சம் தென்னங் கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம் அங்குரார்பண நிகழ்வு திகாமடுல்ல மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நெறிப்படுத்தலில் இன்று கல்முனையில் (10) இடம்பெற்றது .
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ.பாவாதலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம் எஸ்.எம்.சத்தார், எம்.எஸ்.எம்.ஹாரீஸ், எம் எஸ்.எம்.நிசார், எம்.உமர் அலி, றோசன் அக்தர், காரைதீவு பிரதேச சபை உறுப்ப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், ஏ.ஆர்.எம். பஸ்மீர், மற்றும் அம்பாறை தென்னை அபிவிருத்தி சபையின் பிராந்தியமுகாமையாளரின் ஆலோசனைக்கமைவாக சம்மாந்துறை தென்னை அபிவிருத்தி பிரிவின் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.வி.எம்.நியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கல்முனை தொகுதியில் 500 தென்னங் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :