நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இளைஞர் யுவதிகளுக்கு அதிக சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். இலங்கையில் இன்று பென்சன் வாங்கிய பின்னர் நாட்டுக்கு சேவையாற்றும் முறையொன்று உருவாகியுள்ளது.
60 வருடங்கள் தமது குடும்பத்துக்காக உழைத்து அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை பெற்றுவிட்டு, பென்சன் வாங்கிய பின்னர் தான் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் சிலர் உள்ளனர்.
எனவே இளைஞர் யுதிதிகளுக்கு இளமை காலங்களில் சந்தர்ப்பங்களை பெற்றுகொடுங்கள். வேட்பு மனுத்தாக்கலில் மாத்திரம் 100க்கு 25 வீதம் இளைஞர யுவதிகளுக்கு வழங்குவதால் மாத்திரம் இளைஞர் யுவதிகளில் பிரதிநிதிததுவத்தை அதிகரிக்க முடியாது.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படவேண்டும். அதில் முறையொன்று இருக்கும் வரை அது சிரமமான விடயம். மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள், பணம் படைத்தோரிடம் போட்டியிட்டு சாதாரணமானவர்கள் வெற்றிபெற முடியாது.
தேர்தல் பிரசாரம் முக்கியமானது. பெண்களுக்கும் விசேட இடங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். சில பிரேதேசங்களில் பெண் பிரதிநிதிக்கு பதிலாக அவர்களது கணவன்தான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வெற்றியளிக்கும் முறையொன்றை நாங்கள் உருவாக்க வேண்டும்.
உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் பின்லாந்தில் இளம் வயதுடைய பெண் பிரதமர் உள்ளார். இத்தாலி போன்ற நாடுகளில் 33 வயதில் நிதியமைச்சர் உள்ளார். நியுசிலாந்து பிரதமருக்கு 39 வயது. இலங்கையில் அவ்வாறான இளம் பிரதமர் ஒருவர் வர வேண்டும் என்று நான் நம்பிக்கை கொண்டுளேன்.
அரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம். துமிந்த திசாநாயக்க போன்றவர்கள் இலங்கையில் இளம் அமைச்சர்களாக உள்ளனர். அவ்வாறான இளம் தலைவர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும்.
கட்சி பேதங்களுக்கு அப்பால் இளைஞர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கின்றேன். நாமல் ராஜபக்ஷவை பிரதமராக்க போவதால் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
கட்சி பேதமின்றி இவ்வாறு இளஞர் ஒருவர் பிரதமரானால் எங்களுக்கும் விருப்பம்தான். எனினும் நாமல் ராஜபக்ஷ மூன்றாவது சக்கரமாக பசில் உள்ளதாக கூறினார்.
எனினும், அந்த இடத்துக்கு அவர் வந்திருக்கமுடியும். இலங்கைக்கு இளம் பிரதமர் ஒருவர் வந்தால் நல்லது. நியுசிலாந்தில் பெண் பிரதமர் இரண்டு வருடங்களில் செய்த சேவையை இரண்டு நிமிடங்களில் கூறினார்.
எமது நாட்டில் ஒரு வருடத்தில் செய்த சேவைகளை கூற 69 நிமிடங்கள் எடுத்தன. எனவே இளைஞர் யுவதிகளுக்கு இடமளிக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment