இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
பொது சிவில் சட்டம் நீண்ட காலமாக சிறுபான்மை உரிமைகள், குறிப்பாக தனி நபர் சட்டங்களை அவர்கள் பின்பற்றும் உரிமை தொடர்பான விவாதத்தை உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை பலமுறை ஆராய்ந்து வெவ்வேறு அவதானிப்புகளை மேற்கொண்ட போதிலும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் பொதுவான வாரிசு உரிமை சட்டம் குறித்த ஒன்றிய அரசின் கருத்துகளை உச்சநீதிமன்றம் கேட்டது. இந்த விவகாரமும் நிலுவையில் உள்ளது.
பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதற்காக தனியார் சட்டங்களை நீக்க வேண்டும் என்பதை பா.ஜ.க.வைத் தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரிக்கவில்லை. கடந்த கால பாஜக அரசாங்கங்கள் கூட அதனை செயல்படுத்த முடியவில்லை. பாஜகவுக்கும் இந்துத்துவ அரசியலில் அவர்களின் கூட்டாளர்களுக்கும், இந்த பிரச்சினை எப்போதும் தேர்தல் காலங்களில் வகுப்புவாத அணிதிரட்டலை உருவாக்குவதன் மூலம் பெரும்பான்மை வாக்குகளை சேகரிக்க உதவும் ஒரு வசதியான கருவியாகவே பயன்படுகிறது.
தவிர்க்க முடியாத தேர்தல் தோல்வியை பாஜக எதிர்பார்க்கும் போதெல்லாம், பொது சிவில் சட்டத்திற்கான ‘தேவை’ மற்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ‘ஆபத்து’ போன்ற புதைந்து போன வகுப்புவாத அணிதிரட்டல் கருவிகளை மீண்டும் தோண்டி எடுப்பது அவர்களின் அரசியல் தந்திரத்தின் ஒரு பகுதியாகும். பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உ.பி. தேர்தல்களுக்கு முன்னதாக, மோடி மற்றும் யோகி அரசாங்கங்களின் தோல்விகளை மறைக்க அவர்களுக்கு மீண்டும் இக்கருவி தேவையாக உள்ளது.
பொது சிவில் சட்டம் என்பது எம்மதத்தினராக இருந்தாலும், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை குறித்த பொதுவான சட்டங்களை குறிக்கிறது.வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் என இந்த அம்சங்களை ஏற்கனவே அவை ஒழுங்குபடுத்தியுள்ளன. ஆனால், பொது சிவில் சட்டம் இந்த தனியார் சட்டங்களை அகற்றுவதற்கு வழிவகுக்கிறது.
நவீன இந்திய சமூகம் படிப்படியாக ‘ஒரேவிதமானதாக’ மாறி வருவதாகவும், மதம், சமூகம் மற்றும் சாதி ஆகியவற்றின் 'பாரம்பரிய தடைகளை' கலைத்து வருவதாகவும், மாறிவரும் இந்த முன்மாதிரிகளைப் பார்க்கும்போது, ஒரேவிதமான சீரான தனியார் சட்டங்களின் தேவை உள்ளது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மதம்-சமூகம்-சாதி அடிப்படையில் ஆழமாகவும் ஆபத்தானதாகவும் நவீன இந்திய சமூகம் பிளவுபட்டுள்ள இச்சூழலில், அதிகார வர்க்கத்தின் தற்போதைய இந்த விளக்கம் இந்தியாவை 'பன்முகத் தன்மையை' தாண்டிய ஒரு அபத்தத்தை நோக்கி நகர்த்துகின்றதோ என்று பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் மீனா சமூகத்தினர் இந்து திருமணச் சட்டம் 1955 ஐ பின்பற்றுவது குறித்த பிரச்சினை நீதிபதி பிரதிபா எம் சிங் முன் வந்த போது கூறப்பட்ட இந்த நீதிமன்ற அவதானிப்புகள் சாதாரண இயல்பு மற்றும் சூழலுக்கு அப்பாற்பட்டவை என்றும் ஓ.எம்.ஏ.ஸலாம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment