ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் செயலக பிரிவில் பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வைத்து உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற உலர் உணவு வழங்கும் நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி, கிராம அதிகாரிகள், அபிவிருத்தி மையத்தின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இரண்டாயிரத்து நூறு ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் முதல் கட்டமாக நூறு குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :