அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சமுதித்தவிடம் நாளை விசாரணை


J.f.காமிலா பேகம்-

சுதந்திர ஊடகவியலாளரும், ஹிரு தொலைக்காட்சியில் பத்திரிகை நிகழ்ச்சி, அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் ஈடுபடுபவருமான சமுதித்த சமரவிக்ரம, விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய நாளை புதன்கிழமை அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ஹிரு தொலைக்காட்சியில் அண்மையில் இடம்பெற்ற பத்திரிகை நிகழ்ச்சியில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர் சமுதித்த தெரிவித்த கருத்து , பாதுகாப்புப் பிரிவினருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்து பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவினால் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிலியந்தல பொலிஸாரினால் குறித்த ஊடகரின் வீட்டிற்கு சென்று, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவித்தல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :