யாழில் சட்டவிரோதமாக எரிவாயு விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல்



யாழ் லக்சன்-
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் இன்றைய தினம் யாழ்ப்பாணம், வேலணை, புளியங்கூடல், ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், உரம் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

அத்தோடு எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் பரிசோதனை செய்யப்பட்டதோடு, சட்டவிரோதமாக எரிவாயு விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :