இவ்வாறு கூறுகிறார் கடந்தவாரம் தெரிவான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்துறைப் பேராசிரியர் கலாநிதி செல்வரெத்தினம் குணபாலன்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் பேராசிரியரான முதல் தமிழ்மகன் என்ற பெருமையும் இவரையே சாருகிறது.
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் கிழக்கு மாகாணத்தில் முதலாவது பேராசிரியராக விளங்கினார். அதுவும் அவர் பிறந்த காரைதீவு அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்திலும் முதலாவது பேராசிரியராக தடம்பதித்தார்.
அவருக்கு பின்னர் அம்பாறை மாவட்டத்தில் பல பேராசிரியர்கள் உருவானபோதிலும் தமிழ்ச்சமுகத்தைப்பொறுத்தவரை, சுவாமிவிபுலாநந்தருக்குப்பிறகு அவர்பிறந்த காரைதீவில் மட்டும் இருவர் பேராசிரியனானார்கள். அதுதவிர மாவட்டத்தின் ஏனைய கல்முனை திருக்கோவில் பிராந்தியத்தில் வேறு யாரும் உருவாகவில்லை.
இந்நிலையில் அந்த வரலாற்றைத் தகர்த்து திருக்கோவில் பிராந்தியத்திலிருந்து முதலாவது பேராசிரியராக தெரிவாகியுள்ளார் 54 வயதான பேராசிரியர் கலாநிதி செ.குணபாலன் அவர்கள். அதுவும் சமகாலத்தில் அம்பாறை மாவட்டத்திலிருக்கக்கூடிய ஒரேயொரு தமிழ்ச்சமுக பேராசிரியராக இவர் விளங்குகிறார்.
காரைதீவைச்சேர்ந்த செல்வரெத்தினம் பொன்னம்மா தம்பதியினரின் புதல்வரான செ.குணபாலன் வினாயகபுரத்தில் பிறந்து தற்சமயம் தம்பிலுவிலில் மனைவி 4 பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறார். அவர் ஓய்வுநிலைக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் தர்மபாலன், புனிதவதி ,பாமா, யாழ்.நீர்ப்பாசனதிணைக்கள உத்தியோகத்தர் தனபாலன், மட்டக்களப்பு தொழினுட்பக்கல்லூரி பணிப்பாளர் ஜெயபாலன் ஆகியொரின் சகோதரராவார்.
திருக்கோவில் பிராந்தியத்தின் முதலாவது பேராசிரியரான கலாநிதி இந்த உயர்நிலையை அடைந்துள்ளமையையிட்டு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் 20 வருட விரிவுரையாளர் சேவையைக் கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீடத்தின் இரு தடவைகள் பீடாதிபதியாகக் கடமையாற்றிய கலாநிதி எஸ். குணபாலன் முகாமைத்துவப் பேராசிரியராக 12.12.2019 ஆம் திகதியிலிருந்து செயற்படும்வண்ணம் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால விரிவுரையாளர்களில் ஒருவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செல்வரத்தினம் மற்றும் லட்சுமி (பொன்னம்மா) தம்பதியினரின் புதல்வரான இவர் ,தனது ஆரம்பக்கல்வியை திருக்கோவில் வினாயகபுரம் மஹா வித்தியாலயத்திலும், பின்னர் இடைநிலைக்கல்வியினை தம்பிலுவில் மத்திய மஹா வித்தியாலயம் மற்றும் தனது உயர்தரக் கல்வியினை யாழ்- சென் பெற்றிக்ஸ் கல்லூரியிலும் பெற்றார்.
தனது நிருவாகமானி சிறப்புப் பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், முதுமானிப் பட்டத்தினை களனிப் மற்றும் இந்தியாவின் அழகப்பா பல்கலைக்கழகத்திலும், பெற்று தனது கலாநிதிப் பட்டத்தினை இந்தியாவின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தார்.
அத்தகைய பெருமைக்குரிய வரலாற்று சாதனையாளர் பேராசிரியர் குணபாலன் தந்த செவ்வி இது.
கேள்வி: தாங்கள் சிறுவயதில் கற்கும்போது இவ்வாறு பேராசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்ததா?
பதில்: காரைதீவிலிருந்து குடிபெயர்ந்து வினாயகபுரத்தில் வாழ்ந்துவரும்போது அங்கு நான் ஆண்டு1 தொடக்கம் 5வரை படித்தேன். பின்பு தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை தமிபிலுவில் மத்தியமகாவித்தியாலயத்தில் படிக்கமுடிந்தது.வினாயகபுரத்திலிருந்து காட்டுப்பகுதியூடாக 3கி.மீற்றர் தூரம் நடநதுவந்தே கல்விகற்றோம்;.காரைதீவிலிருக்கும் அப்பப்பா சித்தப்பாமார் கல்வியில் சிறந்து விளங்கியமை நான் கற்பதற்கு முதல் காரணமாகும். காரைதீவு ஒரு அற்புதமான ஊர். சுவாமி விபுலாநந்தர் அதன் சிற்பி. எமது குடும்பத்தில் மூத்தஆண்ணா ஆசிரியராகஇருந்தார் பின்னர் கோட்டக்கல்விப்பணிப்பாளராகவிருந்தார். அவர் மற்றும் சகோதரரிகளது ஊக்குவிப்பும் மறுகாரணம்.அண்னா தர்மபாலன் வெரிற்றாஸ் கல்விநிலையத்தை நடாத்தியிருந்தார். ஆனாலும் அன்று பல்கலைக்கழகம் பேராசிரியர் என்ற விழிப்புணர்வு இருக்கவில்லை.இருப்பினும் சகோதரர்களின் உந்துதல் ஆர்வத்தை தந்தது.கற்பித்த ஆசிரியர்களும் ஒரு காரணம்.
உண்மையில் பல்கலைக்கழகத்திற்கு சென்றபின்னரே விரிவுரையாளராக பேராசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் ஆர்வம் வந்தது. தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் சச்சிதானந்தசிவம்(காரைதீவு) அதிபராக இருந்தார் அவரொரு றோல்மொடல் . யுத்தம் காரணமாக யாழிற்கு சென்று படிக்கநேர்ந்தது. அங்கு நாகரெத்தினம் அம்மாவின் குடும்பம் எனக்கு பூரணமாக உதவியது.சென்பற்றிக் கல்லூரியில் படிக்க சுந்தரலிங்கம் ஜிஎஸ் உதவினார். பற்றிக்ஸ் கல்லாரியில் வர்த்தகப்பிரிவில் சேர்ந்து படித்தேன். முதல் தவiணையில் குறைந்த 87 88 ஆண்டுகளில் பின்னர் அனைத்து தவணைகளிலும் நானே முதலிடம். சிறந்தபெறுபேற்றுக்கான விருதுகள் எனக்குத்தான் கிடைத்தது. மாணவர் தலைவர் வெஸ்ற் சுடன்ற் கொஸ்ரல் எவார்ட் அனைத்து கண்ணியமும் கிடைத்து.கிறிஸ்தவ பாடசாலையான அங்கு நானொரு இந்துவுக்கு மாணவர் தலைவர் தேர்தலில் முதலிடம் கிடைத்து தலைவரானேன். அதுவொரு அங்கீகாரமாகவிருந்தது. பிரான்சிஸ் அருமைநாய்கம் ஜ்ரனிஸ்லாஸ் அனைவரையும் மறக்கமுடியாது.
கேள்வி: யாழ்.பல்கலைக்கழகத்தில் முதல்நலை பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ளீர்கள்.உங்கள் அனுபவம் பற்றி கூறுவீர்களா?
பதில் :யாழ் பல்கலைன்கழகத்தில் முகாமைத்துவபீடம் கிடைத்து. விடுதியில் தங்கி கற்றேன். கற்;கும்காலத்தில் வர்;தனகமுகாமைத்துவ பீட மாணவஅணியின் தலைவராக இருந்திருக்கிறேன்.
அங்கு இரண்டாம்நிலை அப்பர் பெறுபேறு கிடைத்தது. அங்கே போதனாசிரியராக இருந்து 1வருடம் சம்மாந்துறை இணைந்தபல்கலைக்கழத்தில் விரிவரையாளராகவிருந்தேன்.பேராசிரியர் காதர்சேர் அந்து வாய்ப்பை தந்தார். பின்பு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கல்விக்கான வாய்ப்பை நிறைய ஏற்படுத்திதந்தது.
கேள்வி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முதல் தமிழர் நீங்கள்.அது வரலாறு. அது பற்றிக்கூறுவீர்களா?
பதில்: அங்கு 3இன மாணவர்களும் வேறுபாடின்றி கற்கிறார்கள். பல்கலாசார பாரம்பரிய புனிதபூமி அது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழர் ஒருவர் பேராசிரியராகவந்தமை என்பது புதுமையல்ல.தகைமையிருந்தால் திறமையிருந்தால் யாரும் பேராசிரியராக வரலாம். அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும். ஏலவே கலாநிதி பத்மரஞ்சன் இருந்தார். அவரிருந்திருந்தால் அவரும் பேராசிரியராகியிருப்பார்.இன்னும்சிலர் இருந்தனர் நாடடைவிட்டு வேறு பல்கலைக்கழகத்திற்குசென்றனர். அங் அவர்கள் பேராசிரியராக இருக்கின்றனர்.இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தென்கிழக்கு பல்கலைக்கழகம் நிதியுதவி உதவிகளை செய்து வாய்ப்பு தந்தது. வாய்ப்புகளை பயன்படுத்தவேண்டும். வாய்ப்பை விட்டுவிட்டு விமர்சனங்களை செய்வதில் பிரயோசனமில்லை.
இங்கு இடம்பெயர்ந்துவநத மாணவர் தொடக்கம் இன்று வரை சகலமாணவர்களும் அன்பாக சகோதார உணர்வுடன் பழகியுள்ளனர்.எம்மிடம் திறமையிருச்தால் முன்னேறலாம்.மாணவர்கள் தமக்கான சூழலை மாற்றிக்கொண்டு முன்னேறவேண்டும். பெற்றோர்களை கஸ்டப்படுத்தி வரமுடியாது. கல்வியை உணாந்துகொண்டு முன்னேறினேன்.இறைவனுக்கும் நன்றி கூறவேணடும்
கேள்வி:பேராசிரியரான இந்த வேளையில் பாடசாலை மாணவர்க்கு நீங்கள் என்ன சொல்லவிளைகிறீர்கள்?
பதில்: மாணவர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கு என்றும் நான்சொல்வது. எங்களில் மாற்றத்தை ஏற்படுத்தகூடியது கல்விஒன்றுதான். சமுகத்தை மாற்றக்கூடியதும் கல்விதான.; நான் இன்று இந்தநிலைக்கு வந்ததற்கும் காரணம் கல்வி. உலகின் அனைத்து மாறறங்களுக்கும்உரிய ஆயதம் கல்வி. நீண்டகாலம் பேராட்டம் நடாத்திய நெல்சன்மண்டேலா அனுபவத்தின்மூலமாக வறுமை அறியாமை மூடநம்பிக்கையை மாற்றும் ஆயுதம் கல்விதான என்றார். எனவே. வருகின்ற வாய்ப்பை பயன்படுத்தவேண்டும். நாம் படித்தது போர்ச்சுழல் கஸ்ட்ப்பபட்டு படித்தேன் வாய்ப்பை பயன்படுத்தினேன. சிறந்த நெற்வேர்க் ஏற்படுத்துங்கள். உறவுகள் தேவை. தொடர்பை பேணவேண்டும்.
பெற்றோர் என்றும் பிள்ளைகளை விரும்பி பெரியாளாக்க விரும்புகின்றனர். ஆனால் பிள்ளகைள் பெற்றோரை சிலவேளை மதிக்காத சந்தர்ப்பம்மிருக்கிறது. அதுபிழை. அரசாங்கம் நிறைய வாய்ப்புகளை வழங்கிவைத்துள்து .. புதிய அரசாங்கம் புதிய மாணவர்களை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் மானிய ஆணைக்குழு மாணவர்களை அதிகரிக்கவேண்டும் அதற்கான வசதிகளை அதிகரிக்கவேண்டும் எனக்கூறியிருக்கின்றன. பல்கலைக்குத் தெரிவாகும் அனைத்துமாணவர்களையும் உள்ளீர்க்கலாம். அரசாங்கம் 10சிற்றி பல்கலைக்கழகங்ளை உருவாக்கவுள்ளது. அதைப்பயன்படுத்தவேண்டும்.
கேள்வி: பேராசிரியராக வரவேண்டும் என்ற ஆர்வத்தை வைராக்கியத்தை ஏற்படுத்திய காரணிகள் என்னென்ன?
பதில்: பேராசிரியராகவரவேண்டும் என்ற வைராக்கியம் எனது தூரநோக்காக இருந்தது. எந்த மாணவரும் தூரநோக்கை நிர்ணயித்து முன்னேறேவேண்டும். நான் கற்பிக்கும்போது சகல மாணவர்களுக்கும் அதயையே கற்பிப்பது வழமை
பேராசிரியராக வருவதற்கு வாய்ப்பினை தந்தது பல்கலைக்கழங்கள்தான் காரணம். விரிவரையாளராகசேர்ந்த உடனே எனக்கு பேராசிரியராக வரவேண்டும் என்று ஆர்வம் தூண்டியது. எமது துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் காதர் இஸ்மாயில் நாஜிம் சக பீட விரிவுரையாளர்கள்.சேர்ந்து பயணித்தோம்.என்னை நம்பி பல்கலைக்கழகத்தினர் துணைத்தலைவராக தலைவராக பீடாதிபதியாக ஒப்படைத்திருந்தனர் அதுவம் ஆர்வத்தைத் தூண்டியது. யாழ் பல்கலைக்கழக நண்பர்கள்.தாமாக வந்து உதவுவாhர்கள். வெளிநாட்டில்செல்லும்போது நிறையஉதவுவார்கள். அவர்கள் என்னை 5சதம்கூட செலவழிக்கவிடமாட்டாhகள்;. ஆர்வத்திற்கு ஒரு காரணம். மனைவியும் ஒரு பட்டதாரி ஆசிரியர். சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்தை ஊட்யடிவர்கள்.
கேள்வி: இன்றைய கொரோனச்சூழல் கல்வியை பாதித்துவருகிறதே. அதுபற்றி பரிகாரம் ஏதாவது சொல்லவிளைகிறீர்களா?
பதில்:இன்றைய கொரோனாவை வைத்துக்காண்டு அனைத்துர்ம் முடிந்துவிட்டது. இனியெங்கு படிபப்து என நினைக்கவேண்டாம். எதுவும் நிரந்தரமல்ல . இதுவும் கடந்துபோகும். நாம் பிழைக்கவேண்டும்.அரசாங்கம் நிகழ்நிலை கற்றல்கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.இடைக்காலத்தில் அதனை கற்றால் பின்னர் நிலைமை சரியாகும் அப்போது வழமையான கற்றழைல மேற்கொள்ளலாம் . எனவே நம்பிக்கை தளராமல் படியுங்கள்.
இலக்கில் கவனமாக இருக்கும் பிள்ளை வெற்றிபெறும். கொரோனா ஒரு பொருட்டல்ல. வாய்ப்பை பயன்படுத்தி முன்னறமுடியும். .போட்டிப்பரீட்சை எனவே போட்டிபோட்டு படிக்கவேண்டும். நாம் படிக்காமல் வேறவர்களை பிழைசொல்லமுடியாது.
உயர்தரம் கற்கும் 2வருடத்தில் தியாகம் செய்தால் முன்னேறலாம். பல்கலைக்கழகத்தில் விரைவாக பட்டத்தை முடிக்கநினைக்கிறார்கள். ஆனால் விசேட பட்டப் படிப்பைபடிக்க வேண்டும். நிறைய புலமைப்பரிசில் பெற்று படியுங்கள். அரசாங்கம் கல்விக்காக பலகோடி ருபாக்களை கொட்டுகிறது. எனவே நாம் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய முன்வரவேண்டும். நாட்டிற்கு பங்களிப்புசேவை செய்யுங்கள். . கற்றுவிட்டு வெளிநாட்டில் படிக்கபோனவர்கள் அங்கு நிற்காமல் நாட்டிற்க வந்து சேவை செய்யவேண்டும். ;. கற்ற பாடசாலையை நினையுங்கள். கிராமத்தை நினையுங்கள். அனைவரும் முன்னேறலாம்.
நேர்கண்டவர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment