கிண்ணியா தள வைத்தியசாலை ஒபரேஷனுக்கான கிட்ஸும் டவலும் இத்துப் போன நிலையில் காணப்பட்ட நிலையில் இதன் உடனடித் தேவையை நிவர்த்தி செய்ய 15 கிட்ஸ்களும் 15 டவல்களும் வாங்கி தைப்பதற்கு பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் நிதி உதவி வழங்கியுள்ளதாக கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் தெரிவித்தனர்.
கிண்ணியா தள வைதியசாலை ஒபரேஷன் டியடரில் பயன்படுத்தும் கிட்ஸ் மிகப் பழையதாக மாறி நிலையில் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் கிடைக்காத நிலை நீண்ட நாட்களாக இப் பிரச்சினை காணப்பட்டது.
மேலும் இவ் வைத்தியசாலையில் ஜனாஸா நிகழ்ந்தால் உடனடியாக அதனை மூடிவிட மக்கள் வீடுகளுக்குச் சென்று பழைய சாரிகளை எடுத்து வருவது வழக்கமாக காணப்பட்டது.
அது வரும் வரைக்கும் ஜனாஸாவை மூடுவதில் கஷ்டம் இருக்கின்றது.
இதனை நிவர்த்தி செய்யும் முகமாக அதே நபர் முதற் கட்ட தேவையை நிவர்த்தி செய்ய 15 ஜனாஸாக்களை மூடுவதற்கான வெள்ளை துணியையும் வாங்கவும் நிதி உதவி அளித்தார்.
தற்போது, ஜனாஸா நிகழ்ந்தால் உடனடியாக வெள்ளை துணியால் போத்தி விடுவதற்கு 15 துணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் இவ் அபிவிருத்தி குழு தெரிவித்தனர்.
இவை இரண்டுக்கும் 30,000 ரூபாவை நன்கொடையாக தந்து உதவிசெய்தார்.
இதற்காக வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயற்பட்டு வருகின்றது. இவை ஒவ்வொன்றும் 50 கையிருப்பில் இருக்க வேண்டும். இதற்கான நன்கொடையின் வாயிலும் திறந்தே இருக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment