நேற்று (30) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாடசாலை காலம் தொடங்கிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஒரு மாதிரி சேதனப் பசளை தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ எடுத்த முடிவை உண்மையாக்குவதற்கு இது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார். இந்த புதிய கருத்தை மாணவர்களின் இதயங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம், நாட்டின் எதிர்கால தலைமுறை நிச்சயமாக நிலையான விவசாயத்தை நோக்கி நகரும் என்று அவர் மேலும் கூறினார்.
பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர் இது குறித்து அனைத்து அதிபர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும், கூறுகையில், சேதனப் பசளை செய்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க பாடசாலை பாடத்திட்டத்தில் வாரத்திற்கு ஒரு காலமாவது சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதமச் செயலாளர் துசித பி. வனிகசிங்க, மாகாண கல்வியமைச்சின் செயலாளர் கிறிஸ்டி லால் பெர்னாண்டோ, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி. மதநாயக்க மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment