இம்மாதம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும்!



வி.ரி.சகாதேவராஜா-
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இந்த மாத இறுதிக்குள் மீளத்திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்றுமாலை அறிவித்துள்ளார்.
அதற்கமைய பாடசாலைகள் திறக்கப்பட முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி நிச்சயம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

50 மாணவர்களுக்கும் குறைவான 1439 பாடசாலைகள், 50 தொடக்கம் 100 மாணவர்கள் வரையான 1523 பாடசாலைகள் என 2962 பாடசாலைகளை மீளத்திறக்க உத்தேசித்திருப்பதாகவும், சுகாதார நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றவுடன் இறுதி முடிவை எடுப்பதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :