வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும், கொடியேற்றமும்.



நூருள் ஹுதா உமர், பாரூக் சிஹான், ஐ.எல்.எம். நாஸிம்-
ம்மாந்துறை- வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும், கொடியேற்றமும் இன்று (06) காலை நடைபெற்றது.
பிரதிஷ்டா பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சிவாகம கலாநிதி அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களின் தலைமையிலான சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ கு. நிமலேஸ்வரக் குருக்கள் அடங்கிய வீரமுனை இந்துகுருமார்களின் விசேட பூஜை வழிபாடுகளுடனும், பிராத்தனைகளுடனும் இடம்பெற்ற பிரம்மோற்சவ பெருவிழாவும் கொடியேற்ற நிகழ்வும் மங்கள இசைகள் முழங்க பூஜைகளுடன் நடைபெற்றது.
கொரோணா சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு மட்டுப்படுத்திப்பட்ட ஆலய பரிபாலன சபையினர் மாத்திரமே இந்நிகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று ஏற்றப்பட்ட கொடியானது 10 நாட்களின் பின்னர் எதிர்வரும் 15ம் திகதி விசேட பூஜைகளுடன் கொடி இறக்கி வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :