பாரம்பரிய உணவகம் திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சனவினால் இன்று திறப்பு விழா நிகழ்வு



முகம்மட் அலி முகம்மட்-
திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாராம்பரிய உணவகம் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 19 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மாவட்ட செயலகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இப்பாரம்பரிய உணவகத்தை திருகோணமலை மாவட்ட மகளிர் சம்மேளனம் ஏற்று நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் பெண்கள் தமது தயாரிப்பு உணவுகளை விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை ஈட்ட ஏதுவாக அமையும்.பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு முயற்சியாக இவ்வேலைத்திட்டம் அரசாங்க அதிபரின் வழிகாட்டலின்கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :