நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபையினரின் விசேட அறிவித்தல்



யாழ் லக்சன்-
நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆலய அறங்காவலர் சபையினர் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆலய அறங்காவலர் சபையினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நித்திய பூஜைகள் நடைபெறுவதாகவும், அபிசேகங்கள், அடியவர்களின் நேர்த்திகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.

எனவே பக்தர்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து உங்கள் வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :