J.f.காமிலா பேகம்-
அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம், கொள்கையை கைவிட்டு மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தை அணுகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அந்த நிதியத்திடம் இருந்து 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக இலங்கை பெற முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும் தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க இன்னும் 1.5 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், ஒருபோதும் தற்போதைய அரசாங்கம் IMF உதவியை நாடப்போவதில்லை என்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment