முஸ்லிம்களின் தனியார் சட்டம் மற்றும் ஏனைய முஸ்லிம்களின் விடயங்களில் அரசாங்கம் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடி முடிவு எடுக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்
எம் ஹரிஸ் நேற்று ( 7)பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்
பாராளுமன்றத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு உரையாற்றினார்
அவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது..
அரசாங்கமானது புதியதொரு பாய்ச்சலை மேற்கொள்ளுவதற்காக இந்த நாட்டில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காற்றிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இன்று பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு பொறுப்பான அமைச்சினையும் வழங்க இருக்கின்றது. இது சம்மந்தமாக அவருக்கு முன்கூட்டியே எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுவது மட்டும் அல்லாமல் அவர் இந்த நாட்டின் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பாமர மக்கள் எதிர்பார்க்கின்ற பெரும் மாற்றத்தை பசில் ராஜபக்ச செய்ய வேண்டும்.குறிப்பாக ஏற்றுமதியில் இன்னுமொரு சவாலை எமது நாடு எதிர்கொண்டுள்ளது.ஜி.எஸ்.பி பிளஸ் என்ற ஐரோப்பிய ஜூனியனின் வரிச்சலுகை நிறுத்தப்படுமா? என்கின்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் ஏன் ஐரோப்பிய ஜூனியன் இந்த நிபந்தனையை விதித்துள்ளது என்றால் பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற,மத உரிமைகள் மீறப்படுகின்ற விடயங்களுக்காக இன்று ஐரோப்பிய யூனியன் இலங்கை சம்மந்தமான கடும் போக்கை கையாள உள்ளது.
இது சம்மந்தமாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் கூறியுள்ளார் பயங்கரவாத தடைச்சட்டம் சம்மந்தமாக பாரிய மாற்றங்களை செய்யப்போகின்றோம் என்று அதனை நிச்சயமாக அரசாங்கம் செய்ய வேண்டும் வெறுமனே பயங்கரவாத தடைச் சட்டம் இருப்பதற்காக காரணமின்றி, நீதிமன்ற உத்தரவின்றி அரசியல் தலைவர்களை கைது செய்வது எங்களுக்கு வேதனையளிக்கின்றது.குறிப்பாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பத்தியுத்தீன் நீதிமன்ற உத்தரவின்றி பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த பல மாதங்களாக அவர் சிறையில் இருக்கின்றார்.எனவே அரசாங்கம் இவ்வாறு நீதிமன்ற உத்தரவு இன்றி கைது செய்யப்பட்ட ரிசாட்டை விடுதலை செய்ய வேண்டும் என இந்த இடத்தில் கோரிக்கை விடுக்கின்றேன்.
அதேபோன்று ஏனைய பல அரசியல் கைதிகள் இருந்துகொண்டு இருக்கின்றார்கள்.குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் சிலர் விடுதலை செய்யப்பட்டனர் இன்னும் பல தமிழ் சகோதரர்கள் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளார்கள் அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.அதேநேரம் மத உரிமை சம்மந்தமாக பல விமர்சனங்கள் சர்வதேச மட்டத்தில் இருக்கின்றன இப்போது நீதி அமைச்சர் முஸ்லிம்களின் தனியான திருமணச் சட்டத்தை திருத்துவதற்காக இன்று முயற்சிகளை செய்து வருகின்றார்.இது சம்மந்தமாக எங்களுடைய 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்து பேசி இருந்தோம்.அவர் இது விடயமாக மேலதிக சில திருத்தங்களை செய்வதாக கூறியிருக்கின்றார்.ஆனால் இது விடயமாக கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மெளலவி ஆதம்பாவா என்னுடன் தொடர்பு கொண்டு எங்களுடைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இது விடயமாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்புக்கு மாறாக முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்தவொரு தீர்மானங்களும் எடுத்துவிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்.அதேவேளை கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை அதனை துரிதமாக வழங்குவதற்கு உரிய அமைச்சர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
0 comments :
Post a Comment