நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் கெளரவ வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க அவர்களிடம் வேண்டியதிற்கு இணங்க Multi Function Printer வழங்கி வைக்கப்பட்டது.
இதனை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிந்தவூர் இளைஞர் இணைப்பாளரும், வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ விமலவீர திசாநாயக்க அவர்களின் நிந்தவூர் இணைப்பு செயலாளரும், கிழக்கு மாகாண ஆளுநரின் கொரோனா தடுப்பு செயலணியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளருமான ஆதம் பாசித் ஹுஸ்னி அவர்கள் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி Dr.பறூசா நக்பர் அவர்களிடத்தில் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய
கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment