கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை வரைக்கும் முதலாவது கொரோனா தடுப்பூசி 13831 நபர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முப்பது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை, செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயம், மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயம், பாலைநகர் றகுமானியா பள்ளிவாயல் ஆகியவற்றில் முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசிகள் இன்று புதன்;கிழமை ஏற்றப்பட்டது.
கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை வரைக்கும் முதலாவது கொரோனா தடுப்பூசி 13831 நபர்களுக்கும், இரண்டாவது கொரோனா தடுப்பூசி 3690 நபர்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment