கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிச்செல்வதால் நாளொன்றுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 தாண்டிச் செல்வதாகவும் அதனால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை 250 ஐ விட அதிகமாகும் எனவும் வைத்தியசாலையிலிருந்து வரும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின் மூலம் வெளிவருகின்றன என அரச வைத்திய வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவின்த சொய்சா தெரிவித்தார்.
நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கையில்:-
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்தையும் விட தற்போது வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அதனால் நாளொன்றுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்தை தாண்டிச் செல்வதாகவும் மரணிப்பவர்களின் எண்ணிக்கை 250ஐ விட அதிகமாகும். எனவும் வைத்தியசாலையிலிருந்து வரும் உத்தியோகபூர்வ மற்ற தகவல்களின் மூலம் வெளிவருகின்றன. வைரஸின் பரவல் வேகமாக இடம்பெறுவதால் குறித்த எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் 2 அல்லது 3 மடங்காக அதிகரிக்கலாம்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக தடுப்பூசி வழங்கப்படவேண்டிய முன்னணி பட்டியலொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்திருந்தபோதும் சுகாதார அமைச்சுக்கு அப்பால் இருக்கும் பிரிவினரின் அழுத்தம் காரணமாக அது முறையாக இடம்பெறாமல் இருப்பதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. அதன் பெறுபேறாகவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொவிட் தடுப்பூசியின் 1ம் கட்ட தடுப்பூசி இன்னும் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் ஒரு கோடியே 95 லட்சம் கொவிட் தடுப்பூசி இதுவரை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றபோதும் அதில் 2 கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு பூரண நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்து கொண்டிருப்பது மொத்த சனத்தொகையில் 15 வீதமானவர்களாகும். ஆனால் அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டிருந்தால், சனத்தொகையில் 45 வீதமானவர்களுக்கு பூரண நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்து கொள்ள முடிந்திருக்கும். அத்துடன் இடம்பெறும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கும் என்றார்.
0 comments :
Post a Comment