தற்சமயம் கோவிட் அச்சுறுத்தல் பயங்கரமான கட்டத்தை அடைந்துள்ளது. மக்களின் கவனயீனம், சுகாதார விதிமுறைகளைப் பேணாமை என்பன பரவலுக்கு பிரதான காரணியான போதும், பக்குவமாக இருப்போரையும் தாக்கவே செய்கிறது. ஆங்கில மருத்துவ அடிப்படையில் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் தொற்றும் வீதம் குறைவதோடு, தொற்றினாலும் உயிராபத்தை கட்டுப்படுத்தலாம். எப்படியும் 100% பாதுகாப்பு எனக்கருத முடியாது. அதேநேரம் கோவிட் காரணமாக ஏற்படக்கூடிய நியூமோனியா நிலமைதான் ஆபத்தானது. இந்த நிலமை ஏற்படமுன் வைத்தியரை அனுகுவதும், மிகப்பொருத்தமான சிகிச்சையை பெறுவதும் மிகவும் முக்கியாமானது என நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.எல். நக்பர் தெரிவித்தார். மேலும் சிகிச்சை முறை தொடர்பில் விளக்கமளித்த அவர்,
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஆங்கில மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் ஒருங்கிணைந்து பயணிப்பது மிகவும் காத்திரமானது. எனினும், எதிர்வரும் காலங்களில் ஆங்கில மருத்துவமோ ஆயுர்வேத மருத்துவமோ எதையுமே உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் மரணிப்பார்களோ என்று பயப்படுகிறேன். எனவே அவ்வாரான ஒரு கட்டம் ஏற்பட்டால் ,உங்களைக் காப்பாற்றிக் கொள்ள கீழ்வரும் ஆயுர்வேத சிகிச்சை ஒழுங்குகளைத் தருகிறேன். இதனைவைத்து வயிறுவளர்க்கும் பாதி வைத்தியராக யாரும் மாரிவிட வேண்டாம் எனவும் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன். காய்ச்சல் தடிமல் இலேசாக வரும்போதே சுவதரனி சூரனம் (ஆ.வை. சபை அணுமதித்த) அரை தேக்கரண்டி காலை- மாலை சுடு நீரில் கரைத்துக் குடிக்கவும்.
இத்துடன் கருஞ்சீரகம் அரைத் தேக்கரண்டி காலை மாலை தேனுடன் மென்று சாப்பிடவும். காய்ச்சலுடனான உடல் வலி துவங்கும் போது, மேற்கூறியவற்றுடன் சுதர்சண மாத்திரையை காலை 1- மாலை 1படி குடிப்பதற்கு கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி, திப்பிலி 1தேக்கரண்டி, கிராம்பு 2-3 என்பவற்றை அவித்த அனுபான நீரைப் பாவிக்கவும். மேலும் சீத்தாராமவட்டி (இதை கூடுதலாக எடுப்பது நஞ்சாகும்.) என்ற குலிசையில் 2- 3 வீதம் காலை- மாலை மேலே கூறிய மருந்துகளுடன் எடுக்கவும். இவற்றுடன் கூடவே நீராவி பிடித்தல்/ மூலிகை ஆவிபிடித்தல் நல்லது.மூலிகை இலைகளாக; நொச்சி, ஆடாதோடா,எலுமிச்சை,துலசி, புதினா. போன்றன சிறந்தவை.
தேநீருக்குப் பதிலாக இஞ்சி-கொத்தமல்லிப் பானம், அல்லது இடைக்கிடையே சுடுநீராவது பருகுவது நல்லது.
மேற்கூறியவற்றுடன் உங்கள் சுகயீனம் அனேகமாக சுகமாகலாம். மனம் சுவை அற்று சாப்பிட முடியாமல் வரும்போது தான்யாதி பஞ்சக்க. (Dhaanyaadi panchaka) என்ற குவாத்த மருந்தில் (500ml, 750ml போத்தல்) 30 மி.லி. காலை மாலை சாப்பாட்டுக்கு முன்னர் எடுக்கவும். சாதாரண அல்லது கடுமையான இருமலுடன் சுவாசிக்க ஓரளவு கடினமாக இருப்பின் நீங்கள் வைத்தியரை நாடுவது நல்லது. அது நியூமோனியாவாகக் கூட இருக்கலாம். இதன்பிறகு வைத்தியரின் கண்கானிப்பின் கீழ் மருத்துவமே சிறந்தது. இப்போதும் கூட வைத்திய உதவி இல்லாது போனால் கீழ்வரும் மருந்துகளை வாங்கிப் பாவிக்கவும்.
சுவாசிக்க கடினம் உருவாகும்போதே சர்சபாதி தைல எண்ணையை நெஞ்சிலேயும் முதுகிலும் 5மி.லீ -10மி.லீ அளவில் காலை மாலை பூசித்தேய்த்து விடுவதோடு, தெனிம்ப தெபட்டு குவாத்த மருந்தில் 500மி.லீ / 750மி.லீ (2 மேசைக்கரன்டி) சாப்பாட்டுக்கு முன் குடிக்கவேண்டும். தொண்டையில் ஏற்படும் கரகரப்பை குறைக்க கருவாப்பட்டை சிறிதளவு அவித்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாயை கொப்புளிக்கவும். மருந்துகளை 10- 15 நாட்களுக்கு எடுப்பது நல்லது. 2- 3 நாட்களில் காய்ச்சல் தனிந்ததும் பூரணசுகம் எனக்கருத வேண்டாம். மேலும், ஆங்கில மருந்துகள் எடுக்க நேர்ந்தால் அதை முதலாவது எடுத்து 30 நிமிடங்கள் தாண்டியதும் மூலிகை மருந்துகளை எடுக்கலாம். மேலே குறிப்பிட்ட வளர்ந்தவர்களுக்கான மருந்துகளின் அளவில் பாதி அளவை சிறுவர்களுக்கு வளங்கவும்.- என்றார்
0 comments :
Post a Comment