நுவரெலியா லவர்சிலீப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு



க.கிஷாந்தன்-
நுவரெலியா பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் இயற்கை வனப்பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்சிலீப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து (28) மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர பிரதேசங்களான ஆவாஎளிய, மஹிந்த மாவத்தை, லவர்சிலிப் தோட்டம், பீட்ரூ தோட்டம் மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரதேசம் ஆகிய பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான தண்ணீர் தாங்கியில் இந்த மனித சடலம் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆவாஎளிய பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கொள்ளா என்று அழைக்கப்படும் நமசிவாயம் அமிர்தலிங்கம் (வயது 42) என நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் நீர் தாங்கியின் இடுக்கில் சிக்கியுள்ள நிலையில் சடலத்தை மீட்கும் பணியை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பிரதான தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேவேளை சடலம் கிடக்கும் பிரதான தாங்கியிலிருந்து மக்கள் குடிநீர் பாவணைக்காக வெளியேரும் தண்ணீரை உடனடியாக தடைசெய்துள்ள பொலிசார் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன் இக் குடிநீர் பாவனையை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு விசேட அறித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வீடு உடைப்பு சம்பவம் ஒன்றில் நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் நுவரெலியா நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :