கேட்டேன் (கவிதை)



கேட்டேன்....
+++++++
Mohamed Nizous


சொத்து இல்லாத மந்திரி கேட்டேன்
கொத்து இல்லாத ஹோட்டல் கேட்டேன்
ரத்தியில் ஒன்றேனும் வாங்கக் கேட்டேன்
ரகசியமாக சிலிண்டர் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத ஊசியைக் கேட்டேன்
ஒரு டொலரேணும் காசியைக் கேட்டேன்
அடிகள் இல்லாத அபிவிருத்தி கேட்டேன்
கொடிகள் இல்லாத கோஷம் கேட்டேன்
மறைந்து பறந்து அங்கர் கேட்டேன்
மாஸ்க் இன்றி வாழ பங்கர் கேட்டேன்
பல்லில் ஒட்டாத டெல்ட்டா கேட்டேன்
உள்ள டெல்ட்டா ஒழியக் கேட்டேன்
தானே இறங்கும் விலையைக் கேட்டேன்
தரமில்லா கோதுமை விலகக் கேட்டேன்
அளவில் குறையாப் பாணைக் கேட்டேன்
களவில் விற்கா மஞ்சள் கேட்டேன்
நடந்து போக நேரம் கேட்டேன்
கிடந்து நெருங்கா பஸ்ஸைக் கேட்டேன்
தொட்டுத் தின்னப் பருப்புக் கேட்டேன்
பிட்டுத் தின்ன தேங்காய் கேட்டேன்
தூக்கம் மறுக்கா ஹேண்ட் போண் கேட்டேன்
துக்கம் கலக்கா மெஸேஜ்கள் கேட்டேன்
உலகுக்கெல்லாம் டொலர் கடன் கேட்டேன்
ஊரு பஸாரை மூடக் கேட்டேன்
வானம் முழுக்க லைக்கைக் கேட்டேன்
வாளாந் தவளைக்கும் ஐடி கேட்டேன்
சுற்றும் மெஸேஜில் உண்மை கேட்டேன்
முற்றும் போடும் சீரியல் கேட்டேன்
ஊருக்குப் போக பாஸ் ஒன்று கேட்டேன்
காருக்குப் போட டயர் ஒன்று கேட்டேன்
கிருமி இல்லாத தேசம் கேட்டேன்
கருமி இல்லாத நேசம் கேட்டேன்
டேட்டா இல்லாத ஒன்லைன் கேட்டேன்
ஓட்டோ செல்லாத வன்வே கேட்டேன்
ஊசி போடாமல் கார்டைக் கேட்டேன்
பூசி மறைக்கா பேட்டி கேட்டேன்
நாட்டுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் கேட்டேன்
போட்டிக்கு சூ கொண்டு போகக் கேட்டேன்
பெரிசாத் தோற்காத சிங்கம் கேட்டேன்
பேட்டிங்கில் பத்தைத் தாண்டக் கேட்டேன்
அரிசி விலை போல் மாக்ஸ்கள் கேட்டேன்
அனைத்தும் நூறைத் தாண்டக் கேட்டேன்
பொய்கள் சொல்லா 'பொரு'செய்தி கேட்டேன்
புழுகு இல்லாத 'அரண' கேட்டேன்
கைகள் கழுவாத காலம் கேட்டேன்
கட்டாய இடைவெளி மாறக் கேட்டேன்
சந்தி இல்லாத சாலைகள் கேட்டேன்
'தொந்தி'கள் நிற்காத சந்திகள் கேட்டேன்
முந்திய வாழ்க்கை வாழக் கேட்டேன்
மூவின ஒற்றுமை மீளக் கேட்டே....ன்
கேட்டேன் கேட்டேன் எல்லாம் கேட்டேன்
கெட்டேன் கெட்டேன் நம்பிக் கெட்டே...ன்



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :