ஏ.பி.அப்துல் கபூர்-
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜே.பாத்திமா அனத் ஜிதாஹ் சாதனைச்சுட்டி (கிரான்ட் மாஸ்டர்) மகுடத்தையும், ஆசிய நாடுகளின் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் (Fastest to Identify Flags of all Asian Countries)' என்ற படத்தையும் வென்று நமது நாட்டிற்கும், எமது அம்பாறை மாவட்டத்திக்கும் பெருமை சேர்த்துள்ளார் என கல்முனை பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
இச் சாதனையினை ஏற்படுத்திய சிறுமியினை கௌரவிக்கும் முகமாக அண்மையில்(21) அச்சிறுமியின் இல்லத்திற்குச் சென்று நேரடியாக பரிசில்கள் வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனைத்து ஆசிய நாடுகளின் கொடிகளையும் மிக வேகமாக அடையாளம் கண்ட முதல் ஆசிய சிறுமி இவரேயாவார்.
டிசம்பர் 3, 2016 இல் பிறந்த இவர், தனது 4 வயது 8 மாதங்களில் அனைத்து 48 ஆசிய நாடுகளின் கொடிகளையும் வெறும் 24 வினாடிகளில் வேகமாக அடையாளம் கண்டு ஆசியா சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிறு வயதிலேயே சிறந்த ஞாபக சக்தியும் பல திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர் எம்.எல்.எம். ஜெஸீம் மற்றும் யு.கே. பாத்திமா ஜவ்ஹறா தம்பதிகளின் செல்வ புதல்வி ஆவார்.
கிரான்ட் மாஸ்டர் பாத்திமா அனத் ஜிதாஹ்வின் இச்சாதனையை உளமாற பாராட்டுவதோடு
இப்படியான இளம் சாதனை சுட்டிகளை பாராட்டுவதில் எப்போதும் நான் பின் நிற்பதில்லை என பொது ஜன பெரமுனவின் கல்முனை அமைப்பாளர் றிஸ்வி முஸ்தபா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment