வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற தினமாகிய இன்று நல்லூரானைத் தரிசிக்க வந்த அடியவர்களுக்கு பொலிஸார் தடைவிதித்தனர். இதனையடுத்து வீதியில் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி , மலர் தூபி வணங்கி சென்றனர்.
நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டு, நல்லூரானை வணங்கி செல்ல வந்த பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க பொலிஸார் மறுத்தமையால் , வீதியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும் , நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை வீதியில் உடைத்து , வீதியில் கற்பூரம் கொளுத்தி , நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி , வீதியிலையே விழுந்து வணங்கி சென்றனர்.
0 comments :
Post a Comment