15 முதல் 24 வரையிலான வயதெல்லைக்கு உட்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை இளைய தலைமுறையாக வரையறை செய்கிறது. இந்த அடிப்படையில் சமகாலத்தில் உலக சனத்தொகையின் 18 சதவீதமானவர்கள் அல்லது 120 கோடி மக்கள் இளையோர்கள் ஆவார்கள். இளைஞர்ளின் நலம் மேம்பாட்டிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழித்தல், சுற்றுச்சூழல் காத்தல், போதை பழக்கத்தை நீக்குதல், ஓய்வு நேர நடவடிக்கை, சுகாதாரம், எச்.ஐ.வி., மகளிர் இளம் பெண்கள், தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், பாலின பாகுபாடு, உலகமயமாதலில் உள்ள பிரச்னை, தீவிரவாதம், சமூகம், முடிவு எடுப்பதில் இளைஞர் பங்களிப்பு என பல்வேறு பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்த ஐ.நா., சபை முடிவு செய்தது. 2001 முதல் ஆரோக்கியம் மற்றும் வேலையின்மை, சுயசார்பு வளர்ச்சி, உற்பத்தி துறையில் ஈடுபடுத்துதல், ஒருமைப்பாடு, இளைஞர்களின் ஈடுபாடு, வறுமை ஒழித்தல், இளைஞர் முன்னேற்றத்திற்கு அவர்களது பங்களிப்பு, காலநிலை மாற்றம், போட்டித்தன்மை, கலந்து உரையாடி ஒன்று சேர்த்தல், உலகத்தை மாற்றுவோம், சிறந்த உலகத்திற்கு இளைஞர்கள், முன்னேற்றத்திற்காக இடம் பெயர்தல், இளைஞர் மனநிலை என்ற கொள்கைகளை அந்தந்த ஆண்டில் அறிவித்து கடைபிடித்து வருகின்றனர்.
இவ் சர்வதேச இளைஞர் தினமானது பல சந்ததிகள், கலாசாரங்கள், மதங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சமாதான கோட்பாடுகளை ஊக்குவித்து மனித உரிமைகளுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிப்பதுடன் ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இளைஞர் தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.
மேலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பயனாளிகளாக மாத்திரம் இல்லாமல் மாற்றத்திற்குரிய வினைத்திறன் மிக்க முகவர்களாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு, ஆர்வம், ஆக்கத்திறன் ஆகிய பண்புகளைக்கொண்ட இளைஞர், யுவதிகள் சமூகத்தின் சவால் மிக்க விவகாரங்களை எதிர்கொண்டு அபிவிருத்தியில் பங்களிப்பு நல்குகிறார்கள். உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச இளைஞர்கள் தினத்தினை “மனித மற்றும் பூகோள ஆரோக்கியத்துக்கான உணவு முறைமைகளை நிலைமாற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்பு” (Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health) என்ற தொனிப்பொருளாகும்.
தொகுப்பு:-
இஷட்.எம் ஸாஜீத்
முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்
அம்பாறை மாவட்டம்.
0 comments :
Post a Comment