திருகோணமலை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் திரு.சீ.அருள்செல்வம் அவர்களின் அறிவுருத்தலுக்கு அமைவாக மூதுார் தபாலகத்தில் முதியோர் கொடுப்பனவுகளைப் பெறும் பயனாளிகளுக்கு தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் உள்ளதால் உரிய கொடுப்பணவுகளை மூதுார் தபாலகத்தின் உதவித் தபால் அதிபர் எம்.எம்.றிசாட் மற்றும் காரியாலய உதவியாளரின் மூலமும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இன்று (29) கையளிக்கப்பட்டுள்ளது.
வாழ்வியல் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இவ்வாறான முதியோர் கொடுப்பணவுகள் வீடு, வீடாகச் சென்று கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்கு பயனாளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகருக்கு தங்களது மனப்பூர்மான நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment