மட்டக்களப்பு போரத்தீவு பற்றில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் அரசுக்கு ஆதரவான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பந்தமாக ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் குடி நீர் பிரச்சினை நிலவுவது என்பது மிக நீண்டகால பிரச்சினையாகும். இருந்தும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இது விடயத்தில் பொடுபோக்காகவே இருந்து வந்துள்ளனர். கிழக்கு மாகாண சபை கூட இது விடயத்தில் இம்மக்களை ஓரம் கட்டியே வந்துள்ளது. தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தும் இம்மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
ஆகவே அரசுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் ராஜாங்க அமைச்சரும் இது விடயத்தில் தலையிட்டு இந்த ஏழை மக்களின் அன்றாட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment