நிந்தவூரில் கொரோணா விழிப்புணர்வு பதாகைகள் திரை நீக்கம் !



நூருல் ஹுதா உமர்-
நாட்டில் தீவிரமடைந்து வரும் கொவிட் 19 கொரோணா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நிந்தவூர் கொவிட் தடுப்பு செயலணியுடன் இணைந்து தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய நிந்தவூர் பிரதேசத்திற்குள் உள்நுழையும் பிரதான பாதைகளில் கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆலோசனைகள் அடங்கிய பதாகைகள் காட்சிப் படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிந்தவூர் பிரதான வீதியின் தென்புற எல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோணா விழிப்புணர்வு பதாகை திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தலைமையில், இலங்கை இராணுவத்தின் 241 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கேணல் ஏ.எம்.சி அபயகோனின் பங்குபற்றலுடன் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிந்தவூர் கொவிட் தடுப்பு செயலணியின் உறுப்பினர்களான நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் எஸ்.எம்.பி.எம் பாறூக் இப்ராஹிம், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஏ எல் அன்வர்டீன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன், நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே எல் நக்பர் உட்பட சுகாதாரத்துறை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :